சென்னை ஏப்ரல், 9
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மத்திய அரசு நிதி தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறது ஆனால் நிதி ஆதாரத்தை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காக கட்சியை பாஜகவில் இணைத்ததாக கூறினார். மேலும் திராவிட கட்சிகள் இந்த தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்றார்.