புதுடெல்லி ஏப்ரல், 9
அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக அருணாச்சல் எப்போதுமே இருந்து வருவதாக தெரிவித்த அவர், அங்கு வளர்ச்சி பணிகள் காலை சூரியனைப் போல மிக வேகமாக நடந்து வருவதாக தெரிவித்தார். முன்னதாக அருணாச்சலின் 30 பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.