புது டெல்லி ஏப்ரல், 9
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. மார்ச் 21-ல் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவல் வைக்கப்பட்டது. இதனை அடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் மனு மீது இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது.