புதுடெல்லி ஏப்ரல், 8
2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் 2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுபம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் தற்போது 10.93 ஜிகா வாட்மின் உற்பத்தி செய்து வருகிறது. இதை 2030 ஆம் ஆண்டுக்குள் 45 ஜிகாவட்டாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.