நெல்லை ஆக, 27
மருதகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. இந்த பயிற்சியினை நேற்று தலைமை இயக்குனர் ரவி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பாளை தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள அலுவலக கோப்புகள் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் 15வது நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு ரூ.343 கோடி தீயணைப்புதுறைக்கு ஒதுக்கப்பட்டு நவீன மீட்புப்பணிக்கான எந்திரங்கள் வாங்கும்பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.