Spread the love

நெல்லை ஆக, 26

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு தொடர்பாக கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேசியதாவது:-

செப்டம்பர் 15 ம் தேதிக்குள் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளாண் துறை தொடர்பான அனைத்து கட்டிட ங்களும் திறக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான நவீன பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகள் தொடர்பான கோரிக்கை களை முன்வைத்து பேசினர். அப்போது பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் என்பவர், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதியான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தவறான செயல்கள் அங்கு நடைபெற்று வருவதாகம் கூறினார்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெப் காமிரா பதிவுகளை தேசியப் புலிகள் காப்பகத்திற்கு கொடுக்கும்போது அதில் பதிவு செய்யப்பட்ட பல காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் அழித்துவிட்டு கொடுப்பதால் அங்கு தவறான செயல்கள் நடை பெறுவது உறுதியாகிறது என குற்றம் சாட்டினர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மர்மநபர்களின் நட மாட்டத்தை கண்காணித்து வனத்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து புகார் மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *