ஏப்ரல், 7
கோடை காலத்தில் சிறுவர்களுக்கு குளிர்பானங்கள் என்றால் அலாதி பிரியம். அதிலும் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதும்,தாரை உருக்கி குடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சீன மருத்துவர் அறிவியல் அகாடமி கூறுகிறது. உடலுக்கு தற்காலிக புத்துணர்ச்சியை தரும் குளிர்பானங்களில் சேர்க்கப்படும் அஸ்பர் டேம், பிரக்டோஸ் சல்போனேட்டட் வேதிப்பொருட்கள் கணைய செயலிழப்பு கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே நிறமூட்டப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்த்து பழச்சாறுகள் மற்றும் இயற்கை பானங்களை அளிப்பது மிகவும் நன்மை தரக்கூடிய விஷயங்களாகும்.