Spread the love

ஏப்ரல், 6

குழந்தைகள் வெயிலில் விளையாடி திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். சூட்டின் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் உண்டாக கூடும்.

உலகம் முழுக்க வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் குழந்தையை மிக கவனமாக கையாள வேண்டும். கோடையில் குழந்தையை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பிறந்த குழந்தைக்கு குறைந்தது மூன்று மாதம் வரை தண்ணீர் தனியாக தரவேண்டியதில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அதிலேயே தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும். அதனால் குழந்தைக்கு சரியான இடைவெளியில் தாய்பபால் கொடுப்பதன் மூலம் குழந்தையை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.

தாய்ப்பால் வழியாக குழந்தையின் பசி ஆற்றுவதோடு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு பழச்சாறுகள் கொடுக்கலாம்.

குழந்தைக்கு முன்றூ மாதங்கள் கடந்த நிலையில் தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்க அதிக வாய்ப்புண்டு. அதிலும் வெயில் காலத்தில் அவர்களது உடலும் நீர்ச்சத்து குறைபாட்டை சந்திக்கும். தாய்ப்பால் பற்றாக்குறை இருக்கும் போது சுத்தமான தண்ணீரை கொடுக்கலாம்.

தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். கோடையில் குழந்தையை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் குழந்தைக்கு தண்ணீர் நிறைவாக கொடுக்க வேண்டும். நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக வெப்ப தடிப்புகள் உண்டாக கூடும். கோடையில் இந்த வெப்ப வெடிப்பு பொதுவானது. இந்த தடிப்புகள் வராமல் தடுக்க குழந்தைகளை குளிக்க வைக்கும் போது இரண்டு டீஸ்பூன் சந்தன பொடிகளை கலந்து குளிக்க வைக்க செய்யலாம்.

இதனால் குழந்தை குளிர்ச்சியாக இருப்பார்கள். சந்தனம் கலந்த பவுடரை பயன்படுத்துங்கள். அதே போன்று டயபர் பயன்படுத்துவதை இயன்றவரை தவிர்த்துவிடுங்கள். தளர்வான ஆடைகளை மட்டும் அணிவியுங்கள்.

நீரிழப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த உதவும் அறிகுறிகளில் சிறுநீர் வெளிப்பாடும் ஒன்று. குழந்தையின் சிறுநீர் வெளியேற்றத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாக கூடும்.

ஆறுமணி நேரம் கடந்தும் சிறுநீர் கழிக்கவில்லை யென்றால் டயபர் ஈரமாக இல்லை என்றால் கவனிக்க வேண்டும். குழந்தையின் உதடுகள் உலர்ந்த நிலையில் இருண்டால், வாய், அழும் போது நீரிழப்பு அறிகுறிகளை உணர்ந்து தாய்ப்பாலையும், நீரையும் அதிகரிக்க செய்ய வேண்டும்.

கடுமையான கோடையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனின் புற ஊதாக்கதிர்கள் இந்த நேரத்தில் கடுமையாக இருக்கும். இந்த நேரத்தில் அம்மாக்களும் பிறந்த குழந்தையை வெளியே அழைத்து செல்ல கூடாது.

ஏனெனில் குழந்தையின் சருமம் சூரியனின் கதிர்களுக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. நண்பகலில் நீங்கள் வெயிலில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் குழந்தையை நன்றாக போர்த்தியபடி எடுத்து செல்லவும். ஆடைகள் அடர்த்தியாக இல்லாமல் வெளிர் நிறமாக இருக்க வேண்டும்.

கொசுக்கள் பூச்சிகள் எப்போதும் கோடையில் அதிகமாக இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் பூச்சிகள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும்.

பூச்சிகள் வராமல் தடுக்க வீட்டில் கிருமி நாசினிகள் பயன்படுத்துங்கள். கொசுக்கள் இல்லாமல் இருக்க வீட்டில் ஏர் கண்டிஷனர் பயன்படுத்துபவர்கள் ஏர் கூலர்களை சுத்தமாக வைத்திருங்கள். இதனால் பூச்சிகளின் தாக்கம் தவிர்க்க முடியும்.

சரியான அறை வெப்பநிலையை பராமரிக்க செய்ய வேண்டும். குழந்தை குளிர் நோயால் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஏசி பயன்பாடு கொண்டிருப்பவர்கள் எப்போதும் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே வைப்பது நல்லது.

ஏசி பயன்பாடு இல்லாதவர்கள் குழந்தை அறையை நன்றாக காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். குழந்தையை அவ்வபோது ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி கொடுப்பதே தாய்ப்பால் தான். தாய்ப்பால் குறையும் போது உடலில் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும்.

அதை ஈடு செய்யும் வகையில் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி வளர உதவும் மருந்துகளை மருத்துவரது ஆலோசனையின் படி கொடுக்க வேண்டும். அதிக நேரம் வியர்க்க விடாமல் குழந்தையை ஈரமாகவும் வைத்திருக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *