Spread the love

ஆக, 31

பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. ஒவ்வொரு வகுப்பறையிலும் குறைந்தது 5 மாணவர்களாவது கண் கண்ணாடி அணிகின்றனர். கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 வயதை கடந்தவர்கள் தான் கண் பார்வை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்று வந்தனர்.

காரணம், தற்போது உள்ள குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி உள்ளிட்டவை தான் அதிகளவில் தவழ்கிறது. அதில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர்கள் கண் பார்வையை இழக்க வைக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றில் நீண்டநேரம் செலவிடுதல், ஜீன் தொடர்பான குறைபாடுகள், சுற்றுச்சூழல் குறைபாடுகள், கண்களின் வளர்ச்சியின்போது ஏற்படும் மாறுதல்கள் உள்ளிட்ட பல காரணிகள், கண் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு காரணமாக மாறுகண் கூட ஏற்படலாம்.

குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

பள்ளிக்கூடங்களிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் குறைந்தது 5 மாணவர்களாவது கண் கண்ணாடி அணிகின்றனர்.

இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து 6 அடி தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும். குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும். அப்போது தான் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் அதிகளவு கிடைக்கும். மேலும் குழந்தைகள் கண்களில் ஏதேனும் பிரச்சினை என்று தெரிவித்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். தாங்களாகவே வைத்தியம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் தவழ தொடங்குவதில் இருந்து அவர்கள் அழாமல் இருக்க பெற்றோர் செல்போன்களை கொடுத்து பழக்கி விடுகின்றனர். அதன் பிறகு குழந்தைகள் வளர வளர அவர்கள் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர். தற்போது கிராம பகுதிகளில் உள்ள குழந்தைகள் மட்டுமே அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாட செல்கின்றனர். நகர பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை வீட்டை விட்டு வெளியே விளையாட அனுப்புவதில்லை. இதனால் வீட்டுக்குள் முடங்கும் குழந்தைகள் செல்போன், டி.வி.யே கதி என கிடக்கின்றனர். மணிக்கணக்கில் செல்போனில் மூழ்கி கிடப்பதால் சிறு வயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதனால் குழந்தை பருவத்தில் செல்போன் கொடுப்பதை குறைத்து, விளையாட வைக்க வேண்டும். மேலும் சத்தான காய்கறிகள் வழங்க வேண்டும்.

குழந்தைகளின் கண் பார்வை பிறந்து 5 வயது வரை அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கண் பார்வை குறைபாட்டில் முக்கியமானவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை. தூரப்பார்வை குழந்தை பிறப்பில் இருந்து 7 வயது வரை வளர்ச்சியை பாதிக்கின்றது. அதனால் குழந்தைகளுக்கு குவிந்த பார்வை அல்லது மாறுபட்ட பார்வை இருப்பின் உடனே மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ள வேண்டும்.

இருளான இடத்தில் செல்போன் திரையில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர், மூளையில் நாளமில்லா சுரப்பி உருவாவதை தடுப்பதால் தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனால் செல்போனை பயன்படுத்தும் போது புற ஊதாக்கதிரை தடுக்கும் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும். பல்வேறு வழிகாட்டுதல்கள் இருந்தாலும் பொதுவாக திரை நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணை திசை திருப்புதல், தூரமாக பார்த்தல், கண்ணை மூடி இருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும் கீரை வகைகள், ஆட்டு இறைச்சி கல்லீரல், மீன் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்டவை சாப்பிடுவதன் மூலம் பார்வைதிறன் மேம்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *