சென்னை ஏப்ரல், 7
குஜராத் மாடலை விட திராவிட மாடல் சிறந்தது என்று மக்கள் நீதி மைய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது மத்திய பாஜக அரசு ஒரே நபருக்கு ஆயிரம் கோடியை கொடுத்துள்ளதாகவும், திமுக அரசு தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு தலா 1000 ரூபாய் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.