சென்னை ஏப்ரல், 6
சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் வீரர் அபிஷேக் அதிரடி காட்டியுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர் பவர் பிளே ஓவர்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக முகேஷ் சௌத்திரி வீசிய இரண்டாவது ஓவரில் 4, 0, 6, 0, 6NB, 6, 4 என விலாசி மொத்தமாக 27 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த மைதானத்தின் அதிர வைத்தார். 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.