கடலூர் மார்ச், 30
பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ள இயக்குனர் தங்கர்பச்சான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் நிற்கும் அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய இயக்குனர் சேரன் நந்திதா தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்களை அழைத்து வர சிலர் முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியை காரணம் காட்டி ஆளும் தரப்புக்கு எதிராக களத்துக்கு வர அவர்கள் மறுத்துவிட்டனராம்.