ஈரோடு மார்ச், 30
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடாதது தியாகம் அல்ல தமிழகம் காக்கும் வியூகம் என்று அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், கவர்னரை அனுப்பி திமுக ஆட்சிக்கு மத்தியில் இருப்பவர்கள் தொல்லை தருகிறார்கள். வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால் 29 காசு மட்டும் தந்து நம் அடிவயிற்றில் கை வைக்கின்றனர். நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும் என்றார்.