சென்னை மார்ச், 28
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், IUML வேட்பாளர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலியின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.