வேலூர் மார்ச், 30
தேர்தல் ஆணையமே மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது என்று அமைச்ச துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனே வழங்குகிறது. எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னத்தை கூட கொடுக்க மறுக்கிறது இதற்கெல்லாம் மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்றார்.