சென்னை மார்ச், 29
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சீசன் தொடங்கிய முதல் நாளில் CSK vs RCB போட்டியை 16.8 கோடி பேர் டிவியில் பார்த்ததாக டிஸ்னி ஸ்டார் தெரிவித்துள்ளது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவு முதல் நாள் போட்டியை இவ்வளவு பேர் பார்ப்பது இதுவே முதல்முறை. இந்த போட்டியை ஒரே நேரத்தில் 6.1 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். 1,276 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.