கடலூர் மார்ச், 26
பாராளுமன்ற தொகுதிக்கான பொது தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்கும் என்றனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்களால் திறக்க முடியவில்லை. இது மட்டுமின்றி தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல்வேறு சந்தேகங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்ட அறையின் பூட்டு திறக்கப்பட முடியாததால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.