சென்னை மார்ச், 26
மக்களவைத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. தொடர்ந்து தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் இத்தேர்தலை எதிர்கொள்கிறது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளும், சிறிய அரசியல் கட்சிகளும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட தங்களுக்கு கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று இரவு கொங்கு மக்கள் முன்னணி கட்சி அதிமுகவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.