சென்னை மார்ச், 24
அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை தேமுதிக பெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டார். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.
மேலும் திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி, மத்திய சென்னையில் பார்த்த சாரதி, கடலூர் சிவக்கொழுந்து, தஞ்சாவூர் சிவநேசன் ஆகியோர் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர்.