சென்னை மார்ச், 22
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற வெற்றி படங்களை தந்த பொன்ராம் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்று கூறலாம்.