நீலகிரி மார்ச், 22
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்து களம் காண இருப்பதால் டெல்லி தலைமை உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார். தேர்தலுக்கு முன் தமிழகத்திற்கு வருகை தர இருக்கும் அவர் நீலகிரி, பெரம்பலூர், கோவை, வேலூர் ஆகிய தொகுதிகளில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார்.