சென்னை மார்ச், 21
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இபிஎஸ் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை இரண்டாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.