சென்னை மார்ச், 21
இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு கூடியுள்ளது.