சென்னை மார்ச், 18
கரும்பு விவசாய சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை இன்று காலை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.