சென்னை மார்ச், 18
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாக பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விபரங்களையும் வெளியிட வேண்டும் என சிட்டிசென்ஸ் ரைட்ஸ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.