கர்நாடகா மார்ச், 15
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி மோசடி வழக்கில் உதவி கோரி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். அப்போது எடியூரப்பா தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் எடியூரப்பா மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.