சென்னை மார்ச், 4
மார்ச் 9க்குள் கூட்டணியை இறுதி செய்ய அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு 6-7, தேமுதிகவிற்கு 3-4, தொகுதிகளும், சமக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக மீதமுள்ள 25 – 27 இடங்களில் நேரடியாக போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.