நேபால் மார்ச், 2
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. நேபாளத்தில் நேற்று நடந்த U16 மகளிர் அணிகள் இடையிலான சேம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பூடானை எதிர்கொண்டது 61 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியின் முடிவில் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அடுத்து மார்ச் 5-ல் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துடன் மோத உள்ளது.