சென்னை பிப், 27
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வர உள்ளார். அண்ணாமலையின் ‘எண் மண் என் மக்கள்’ நடைபயணம் நிறைவு விழா இன்று பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள இன்று மதியம் தமிழகம் வரும் பிரதமர், மாலையில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இதனையடுத்து நாளை காலை தூத்துக்குடியில் நடைபெறும் நலத்திட்ட விழாவில் கலந்து கொள்ளும் அவர் புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.