சென்னை பிப், 29
வார விடுமுறை நாட்களில் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக கிளம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை விருத்தாசலத்திற்கு 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் கோவை, தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.