கீழக்கரை கிழக்குத் தெரு நடுத்தெருவில் உயிர் பலி கேட்க துடிக்கும் ஆபத்தான வாறுகால் குழி!
கீழக்கரை பிப், 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் தரமற்ற வாறுகால் மூடிகளால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதும் பிறகு இதுகுறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதும் தொடர் கதையாகி வருகின்றன.
கிழக்குத்தெரு முகம்மது காசீம் அப்பா தர்ஹா செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி வாறுகால் மூடி உடைந்து வருவதற்கு தரமற்ற மூடிகளே காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
கடந்த மாதம் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி மெயின் கேட் அருகில் மூடி உடைந்து அது குறித்த செய்தியை நமது வணக்கம் பாரதம் இதழிலும் பிரசுரித்திருந்தோம். இரண்டு நாட்கள் கழித்து அதனை சரி செய்து கொடுத்தது நகராட்சி நிர்வாகம்.
நேற்று பட்டாணியப்பா சாலை வளைவில் உள்ள வாறுகால் மூடி உடைந்து குழி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.
நகராட்சி சார்பில் அப்பகுதியில் நட்டு வைக்கப்பட்டு இருக்கும் கம்பை பார்த்த பொதுமக்கள் ஸடெம்ப் இருக்கு பேட் எங்கப்பா… என் தலையில் அடித்துக்கொண்டு கடந்து செல்கின்றனர்.
குறைகளை சுட்டிக்காட்டும் போது அதனை சரி செய்வது பெரிதல்ல, செய்யும் பணிகளை தரத்தோடு செய்ய வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்