கீழக்கரை மார்ச், 1
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
15 வது ஒன்றிய நிதி ஆணைய சுகாதார மானியத்திட்டம் 2023-2024 நிதி திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாத காலத்துக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் நாமக்கல்லை சேர்ந்த ரேவதி இன்ஃப்ரா ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கான துவக்கப்பணியினை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா(எ)முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திட்ட நல பணிகள் இணை இயக்குனர் சிவானந்தவள்ளி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன், நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான்,முன்னாள் நகர்மன்ற தலைவர் பஷீர் அகமது, சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா,நகர்மன்ற உறுப்பினர்கள் சேக் உசேன், மூர் நவாஸ் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.