சென்னை பிப், 26
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாவட்டங்களிலும் பாஜகவை எதிர்த்து பானை சின்னத்தில் விசிக போட்டியிடும் எனக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்தியாவில் பாஜகவை எதிர்க்கும் தலித் தலைவரான திருமாவளவனை முன்னிறுத்தும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பை கருதலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.