சென்னை பிப், 23
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11:30 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் திமுகவின் தேர்தல் பணிகள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.