மகாராஷ்டிரா பிப், 23
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. ஜோஷி 1995 முதல் 1999 வரை முதலமைச்சராக இருந்தார். வாஜ்பாய் ஆட்சியில் 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகர் ஆகவும் இருந்தவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.