சென்னை பிப், 21
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று விவசாய ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அதே பட்டியல்களையே இந்த ஆண்டு வாசிப்பதால் எந்த பயனும் இருக்காது. அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் விளம்பரமாகவே தொடர்கிறது. மொத்த விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றார்.