சென்னை பிப், 20
விஸ்வ இந்து பரிஷத் தென்தமிழகத் தலைவர் பொறுப்பை கதிர்வேல் ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று இரவு இபிஎஸ்சை சந்தித்த அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு வழக்கறிஞர் பிரிவில் மிக முக்கிய பதவி தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அவரைத் தொடர்ந்து இன்று பலர் அதிமுகவில் இணைவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.