சென்னை பிப், 18
கட்சி பெயரில் எழுத்துப் பிழை இருப்பதாக விமர்சனம் எழுந்ததால், நடிகர் விஜய், கட்சி பெயரில் “தமிழக வெற்றி’க்’கழகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்துள்ளார் தமிழில் பெயரை மாற்றினாலும் ஆங்கில சுருக்கம் TVK என்ற பெயரை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. விஜய் TVK என்பதை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் முறையிட திட்டமிட்டுள்ளார்.