பெங்களூரு பிப், 16
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடாவுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு நேற்று லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது தேவ கௌடாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.