ராஜஸ்தான் பிப், 9
உத்தரகாண்ட்டைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில் முதலில் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்ற பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. எனவே உத்தரகாண்டை தொடர்ந்து ராஜஸ்தானிலும் விரைவில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படலாம் என அம்மாநில அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.