நெல்லை பிப், 9
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார் அந்த வகையில் நேற்று அவர் நெல்லையில் நிர்வாகிகளை சந்திக்க இருந்த நிலையில் திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இதனால் நேற்றைய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அவர் சென்னை புறப்பட்டார்.