சென்னை பிப், 7
பாஜக மாநிலத்தவர் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவாக நடைபெற இருந்த நடைபயணத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே. பி நட்டா தலைமையில் சென்னையில் இந்த நடைபயணத்திற்கு பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.