சென்னை பிப், 6
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சாதாரண பெண்கள் அரசியலில் உயர்ந்த இடத்தில் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக கூறிய அவர் பெண்களுக்கு அதிக அளவு வாய்ப்பு வழங்கும் கட்சியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக கூறினார். மேலும் வரும் தேர்தலில் அதிக அளவிலான பெண் வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது என்றார்.