சென்னை பிப், 6
முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிலிருந்து நாளை நாடு திரும்புகிறார். முதல்வர் 8 நாள் பயணமாக கடந்த 27ம் தேதி ஸ்பெயின் சென்றார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். குறிப்பாக ஸ்பைனில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலைகளை விளக்கினார். இதன் காரணமாக ஹபக் லாய்டு நிறுவனம் தமிழகத்தில் 2500 கோடி முதலீடு செய்ய உள்ளது.