புதுடெல்லி பிப், 6
நாட்டின் எல்லை பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது என உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். தவறான கொள்கையால் கடந்த ஆட்சியில் அச்சுறுத்தலாக இருந்த பகுதிகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மற்ற நாடுகளுடன் இந்தியா நட்புறவை விரும்புகிறது எனவும் தெரிவித்தார். மேலும் மூன்று புதிய குற்றவியல் வீதி சட்டங்கள் நவீன சட்டங்களாக இருக்கும் என்றார்.