சென்னை பிப், 4
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று இரண்டாவது முறையாக ஆலோசனை மேற்கொள்கிறது. தொடர்ந்து நாளை முதல் ஐந்து நாட்களுக்கு இக்குழு பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் விவசாயிகள் மீனவர் உள்ளிட்டோர் கருத்தைக் கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.