சென்னை பிப், 4
கூட்டணி பங்கீடு தொடர்பாக சிபிஎம், மதிமுகவுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை சிபிஎம் நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. பிற்பகல் 12 மணிக்கு மேல் மதிமுக உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது மதிமுக சுமார் ஆறு இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு இடங்களில் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.