திருச்சி ஜன, 26
பலமுறை தள்ளி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இன்று மாலை திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.