சென்னை ஜன, 25
அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் குழுக்களின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தேர்தல் பிரச்சார குழு, அறிக்கை தயாரிப்பு குழு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு ஆகியவற்றை அமைத்திருந்தார் பொதுச் செயலாளர் இபிஎஸ். இன்று முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.