மும்பை ஜன, 22
இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவர் தற்போது வரை 18,420 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி 18,575 ரன்கள் எடுத்து முன் நிலையில் இருக்கிறார். இன்னும் 156 ரன்கள் ரோகித் எடுத்து விட்டால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியின் சாதனையை முறியடித்து விடுவார்.